பட வாய்ப்பே இல்லை.! நடிகை அமலா பால் எடுத்த அதிரடி முடிவு! அவரது எண்ணம் நிறைவேறுமா??amalapaul-going-to-participate-in-bigboss-show

தமிழில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். ஆனால் அவர் அதனையடுத்து வெளிவந்த மைனா படத்தில் நடித்ததன் மூலமே மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

பின்னர் அவர் விஜய், ஆர்யா, தனுஷ் என பல டாப் நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அப்பொழுது அவர் பிரபல இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்குமிடையே  கருத்து வேறுபாறு ஏற்பட்டு அவர்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

amala paul

விவாகரத்திற்கு பிறகும் அவர்  சில படங்களில் நடித்து வந்தார்.  ஆனால் தற்போது அவரிடம் சொல்லிக் கொள்ளுமளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து தனது மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்காக நடிகை அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும்,  நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற எண்ணத்தில் அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.