சினிமா

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து முன்னணி நடிகையை நீக்கிய இயக்குனர் மணிரத்னம்! இதுதான் காரணமா!

Summary:

Amalapal manirathnam

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் ஒரு முன்னணி இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் கடந்த ஆண்டு வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் 300 கோடி பட்ஜெட்டில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தாய்லாந்தில் ஆரம்பமாக உள்ளது. அதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, அமிதாப் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை அமலாபால் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் திடீரென அமலாபாலை படத்திலிருந்து நீக்கியுள்ளார். அதற்கு காரணம் அவர் தற்போது இருக்கும் தோற்றம் அந்த படத்திற்கு செட் ஆகவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


Advertisement