சினிமா

ஆத்தாடி! மலை உச்சியில் செம தில்லுதான்! அமலாபால் செய்த காரியத்தை பார்த்தீர்களா! பதறிய ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால்

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு பெயரை எடுத்து தரவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் படவாய்ப்புகளும் குவிந்தது. பின்னர் அவர் விக்ரம், விஜய், தனுஷ் ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அமலாபால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் மூன்று ஆண்டுகளிலேயே பிரிந்தனர். பின்னரும்  அமலாபால் சினிமாவில் பிசியாக இருந்துவந்தார். அவரது நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல் என்ற படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம்  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மலை உச்சியில் தனது சகோதரரின் மடியில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் மலை உச்சியில் ஏன்மா இப்படி? பாத்து பத்திரமா இருங்க என கமெண்டு செய்து வருகின்றனர். 


 


Advertisement