சினிமா

புதிய தொழிலில் குதித்த அமலாபால்!. தொழிலில் அதிக பெண்களை ஈடுபடுத்த உள்ளாராம்!.

Summary:

புதிய தொழிலில் குதித்த அமலாபால்!. தொழிலில் அதிக பெண்களை ஈடுபடுத்த உள்ளாராம்!.


பொதுவாக நடிகர் நடிகைகள் நடிப்பை தாண்டி, தனியாக தொழில் செய்வது வழக்கம். அந்த வரிசையில் தற்பொழுது நடிகை அமலா பால் சேர்ந்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகை அமலா பாலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டார் அமலா பால்.

நடிகை அமலா பால், ஊட்டச்சத்து பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கவிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களை அதிக அளவில் பணிகளில் ஈடுபடுத்த உள்ளார்.

நடிகை அமலாபால் பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Advertisement