சினிமா

நடிகை அமலாபால் வெளியிட்ட புது புகைப்படம்! இணையத்தில் ட்ரெண்டிங்!

Summary:

Amala paul koli festival photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், மேலும் சூர்யா, அதர்வா, ஆர்யா போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் அமலாபால். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக்கா நடித்து வருகிறார் அமலாபால்.

இந்நிலையில் தனது வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் அமலாபால். அந்த வகையில் இன்று கோலிப்பண்டிகை என்பதால் உடல் முழுவதும் வண்ணம் பூசி வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலாபால். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement