நடிகை அமலாபால் வீட்டில் தூள் கிளப்பும் திருமணக் கொண்டாட்டம்! செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட வீடியோ!!
தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகை அமலாபால். அப்படம் மைனாவின் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அமலாபால் விக்ரம், விஜய், தனுஷ் ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அமலாபால் அடுத்தடுத்ததாக சினிமாவில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவார்.
இந்த நிலையில் அவர் தற்போது தனது வீட்டில் திருமண கொண்டாட்டம் நடைபெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை அமலா பாலின், தம்பி அபிஜித் பாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மணமக்களை அறிமுகம் செய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் அமலாபால் வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.