சினிமா

வீட்டில் விசேஷமுங்க! செம குஷியோடு பொதுமேடையில் போட்டுடைத்த சஞ்சீவ்! உற்சாகத்தில் ஆரவாரம் செய்த ரசிகர்கள்!

Summary:

alya manasa pregnant

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகே இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்தனர். மேலும் அதன்மூலம் இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது, விளம்பர படங்களில் நடிப்பது, டப்மாஷ் வீடியோ, புகைப்படங்கள் என மிகவும் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். பின்னர் யாரும் எதிர்பாராதவிதமாக ஆலியா பிறந்தநாள் அன்று இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.அதனை தொடர்ந்து அவர்களுக்கு கோலாகலமாக திருமண வரவேற்பு நடைபெற்றது.

சஞ்சீவ்-ஆல்யா க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்பொழுது அங்கு மேடையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக  இருப்பதாக அறிவித்தார்.இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்துள்ளனர். மேலும் அந்த காதல் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement