ஷீட்டிங் ஸ்பார்ட்டில் மாமதுர பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் வீடியோ!!

ஷீட்டிங் ஸ்பார்ட்டில் மாமதுர பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் வீடியோ!!



Alaya manasa dance video goes viral

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை  பெற்ற ராஜாராணி என்ற சீரியலில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. 

இவர்கள் இருவரும் சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்த நிலையில் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையாம், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பிரசவத்திற்கு பிறகு சில காலம் சீரியலில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா தற்போது ஷீட்டிங் ஸ்பார்ட்டில் மாமதுர பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.