அட.. இப்படி கதறி கதறி அழுறாங்களே! பிக்பாஸ் அமீர் மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்! தீயாய் பரவும் வீடியோ!!

அட.. இப்படி கதறி கதறி அழுறாங்களே! பிக்பாஸ் அமீர் மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்! தீயாய் பரவும் வீடியோ!!


alaina-ayisha-eliminate-in-colors-tamil-dance-show

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் அமீர். இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் அமீர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று நேரடியாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். அமீர் தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.

அவர் அண்மையில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் அவரது அம்மாவின் மரணம் குறித்தும், அவருக்கு தான் சிறந்த டான்ஸராக வரவேண்டும் என்பது ஆசை எனவும் கூறியிருந்தார். மேலும் அம்மாவின் மறைவிற்குப் பிறகு தான் துவங்கிய நடனப் பள்ளியில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் அலெனா மற்றும் ஆயிஷா எனவும், அவர்களால்தான் தனது வாழ்க்கை மாறியதாகவும் கூறியிருந்தார்.

மேலும் அவர்களது குடும்பமே தற்போது தனது குடும்பமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு FREEZE டாஸ்கில் அலெனா, ஆயிஷா மற்றும் அவர்களது அம்மா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். மேலும் அலெனா, ஆயிஷா இருவரும் கலர்ஸ் தமிழ் டிவியில் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி வந்தனர்.

 இந்த நிலையில் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளனர். அப்பொழுது இருவரும் கதறி அழுதுள்ளனர். அந்த வீடியோவை பகிர்ந்த அவர்களது அம்மா, தயவுசெய்து அழுது என்னை அமீர் கிட்ட மாட்டி விடாதே, ஏற்கனவே அமீர் வெளியே வந்து என்ன சொல்வான் என்ற பீதி எனக்கு இருக்கிறது. உனக்கு தோல்வி புதிதான ஒன்று என்றாலும் இனிமேல் கவனத்துடன் இருந்து வெற்றியை நோக்கி செல்வோம் என்று கூறியுள்ளார்.