வாவ்.. கியூட் ஸ்மைல்! மஞ்சகாட்டு மைனாவாக ஜொலிஜொலிக்கும் பிக்பாஸ் அக்ஷரா! வைரலாகும் புகைப்படங்கள்!!

வாவ்.. கியூட் ஸ்மைல்! மஞ்சகாட்டு மைனாவாக ஜொலிஜொலிக்கும் பிக்பாஸ் அக்ஷரா! வைரலாகும் புகைப்படங்கள்!!



Akshara reddy photoshoot viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி.

இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மாடலிங் துறையை சேர்ந்த இவர் ஆல்பம் பாடல்களில், விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் அக்ஷரா  “மிஸ் சூப்பர் குளோப் இந்தியா – 2019” ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஆவார். அக்ஷரா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சக போட்டியாளரான வருணுடன் நெருங்கிய நட்பு பாராட்டினார். மேலும் அதனை தற்போதும் தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது மஞ்சள் நிற புடவையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அழகான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.