இந்தியா சினிமா Covid-19

25 கோடி இல்லையாம்..! அதற்கு மேலும் நிதி வழங்கி உள்ளாராம் நடிகர் அக்‌ஷய் குமார்.! எத்தனை கோடி தெரியுமா.?

Summary:

Akshai kumar donates 3 crores to mumbai corporation for corono

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இழந்து தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு உதவி செய்யவும், கொரோனா தடுப்பு நிவாரண நிதியாகவும் பலரும் உதவி செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து, தனது சேமிப்பில் இருந்து 25 கோடி ரூபாயை நிதியாக வழங்குவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த 25 கோடி மட்டும் இல்லாமல் மேலும் மூன்று கோடிகளை அக்‌ஷய் குமார் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்கும் சுகாதாரத்துறைக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க உதவும் வகையில் மும்பை மாநகராட்சிக்கு அக்‌ஷய் குமார் 3 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அக்‌ஷய் குமார் 28 கோடிகளை நிதியாக வழங்கியுள்ளார்.


Advertisement