சினிமா

அட.. பாரதி கண்ணம்மா ஹேன்ட்சம் ஹீரோ அகிலனின் அம்மா இவங்கதானா! நீங்க பார்த்துருக்கீங்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை வெற்று நாளுக்குநா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று நாளுக்குநாள் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரில் பாரதியாக அருண்பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் பாரதிகண்ணம்மா தொடரில் ரூபஸ்ரீ, ரிஷி, அகிலன், ஸ்வீட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தொடருக்கு வலு சேர்த்து வருகின்றனர். இந்த தொடரில் பாரதியின் தம்பியாக நடித்துவரும் அகிலன் ஒரு மாடல் ஆவார். இவர் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹேண்ட்சம் ஹீரோவாக வலம்வரும் அகிலனின் அம்மாவிற்கு இன்று பிறந்தநாள். இந்நிலையில் அகிலன் அம்மாவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.


Advertisement