சினிமா

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்தில் அஜித்தின் சூப்பர் புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்!

Summary:

Ajith unseen photos goes viral

இந்திய அளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் நம்ம தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது திறமையாலும், சொந்த முயற்சியாலும் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு வந்துள்ளார் தல அஜித். பல்வேறு வெற்றிப்படங்கள், தோல்வி படங்களை சந்தித்துள்ள இவரது சினிமா பயணம் சமீப காலமாக வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த வரும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்க தயாராகிவருகிறார் தல அஜித்.

பொதுவாக தான் நடிக்கும் படங்களை தவிர அஜித் வேறு இடங்களில் பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஓன்று. இப்படி இருக்க, இதுவரை யாரும் அஜித்தை இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்திராத வகையில் புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் வைரலாகிவருகின்றனர். வேஷ்டி சட்டை அணிந்து அஜித் கிரிக்கெட் விளையாடுவதுபோல் அந்த புகைப்படம் உள்ளது. இதோ அந்த புகைப்படம். 


Advertisement