மேடையில் மகள் நடிக்க, ஓரமாக நின்று ரசித்து பார்த்த தல அஜித்! இணையத்தை கலக்கும் வீடியோ!

மேடையில் மகள் நடிக்க, ஓரமாக நின்று ரசித்து பார்த்த தல அஜித்! இணையத்தை கலக்கும் வீடியோ!


ajith-stand-and-see-the-daughter-drama

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து, பெரும் ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள்,  பிறந்தநாள் ஆகியவற்றை திருவிழாக்களை போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், சொந்த முயற்சியில்  உழைப்பால் முன்னேறிய இவர், எப்பொழுதும் மிகவும் எளிமையாக இருக்கக் கூடியவர். மேலும் சினிமாவிற்கு போலவே குடும்பத்திற்கும் பெருமளவில் முக்கியத்துவம் கொடுப்பவர். அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.  

Ajith

தல அஜித் சிறந்த நடிகர் மட்டுமின்றி அன்பான கணவர் மற்றும் பொறுப்பான தந்தையும் கூட. அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்ட அரிய வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். இந்நிலையில் தற்போது மகள் அனோஷ்கா பள்ளியில் மேடையில் முயல் வேடமிட்டு நடித்து கொண்டிருக்க, அதனை சாதாரண  தந்தையாக அஜித் வியந்து,  ஓரமாக நின்று ரசித்து பார்த்த வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.