இங்கே கூடவா? கடுப்பாக்கிய ரசிகர்! தல அஜித் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!

இங்கே கூடவா? கடுப்பாக்கிய ரசிகர்! தல அஜித் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!


ajith-pulls-a-phone-for-taking-selfie

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் எங்கு சென்றாலும் அவரை காணும் ரசிகர்கள் சுற்றிவளைத்து செல்பி எடுத்துக் கொள்வர். அப்பொழுதெல்லாம் அவர் ரசிகர்களுடன் பொறுமையாக பேசி புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றுள்ளனர். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் அவருடன் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஓட்டு போட வந்த அஜித் அருகே சென்று மாஸ்க் கூட அணியாமல் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனால் கடுப்பான தல அஜித் அவரது செல்போனை பறித்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பின்னர் கோபமாக ரசிகர்களை அங்கிருந்து கிளம்புங்கள் என்று சைகையால் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் அவரை பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.