கோலிவுட்டில் பரபரப்பு... தளபதி படத்தை தட்டி தூக்கிய தல பட நிறுவனம்.!!ajith-producer-bought-the-distribution-rights-of-thalap

தமிழ் சினிமாவில் ரஜினி - கமல் போட்டிக்கு பிறகு தற்போது அஜித் - விஜய் போட்டிதான் ரசிகர்களிடம் அதிகம் காணப்படுகிறது. கடந்த 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் மற்றும் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியானது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா போல கலை கட்டியது. தற்போது விஜய் நடித்த திரைப்படத்தை அஜித் படத்தை தயாரிக்கும் நிறுவனம் வாங்கி இருப்பது ரசிகர்களிடம் பேசு பொருளாகி இருக்கிறது.

தி கோட் திரைப்படம்

தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட். இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன். மோகன். பிரசாந்த், யோகி பாபு மற்றும் பிரபுதேவா உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வருகின்ற செப்டம்பர் மாதம் கோட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

Kollywood

கோட் திரைப்படத்தை வாங்கிய அஜித் பட நிறுவனம்

இந்நிலையில் கோட் திரைப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் 30 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் குமாரை வைத்து குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படத்தின் உரிமைகள் 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கோட் திரைப்படத்தின் விநியோக உரிமை 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடடே... அஜித் குமாரின் வாழ்க்கையை மாற்றிய ரஜினிகாந்தின் அட்வைஸ்.!! சுவாரசியமான தகவல்.!!

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஷாக்... சினிமாவிலிருந்து விலகும் துஷாரா விஜயன்.!! அவரே பகிர்ந்து கொண்ட அதிர்ச்சியான காரணம்.!!