அஜித்தின் அடுத்த படத்தில் ரங்கராஜ் பாண்டே! உறுதிசெய்த பாண்டேajith-next-film-in-actor-rankaraj-banda

பிரபல தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவியின் தலைமை பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே அஜித்தின் அடுத்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக தல அஜித் அவருடைய கணவர் போனி கபூரின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'பிங்க்' படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். இப்படம் அஜித்துக்கு 59 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளிவராத நிலையில்,

சிறந்த கல்வியாளரும், திறமையான அரசியல் பேச்சாளருமான தந்தி டிவியில் தனது பணியினை ராஜினாமா செய்த ரங்கராஜ் பாண்டே இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவர் நடிப்பது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு பில்லா, மங்காத்தா,  ஆரம்பம் ஆகிய படங்களில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.