"அஜித்துடன் என்னை கட்டாயப்படுத்தி தான் நடிக்க வைத்தார்கள்" அஜித் பட நடிகையின் வைரல் பேட்டி..

"அஜித்துடன் என்னை கட்டாயப்படுத்தி தான் நடிக்க வைத்தார்கள்" அஜித் பட நடிகையின் வைரல் பேட்டி..


Ajith movie actress controversy interview

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தல என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றும் பெயர் பெற்றிருந்தார்.

Ajith

ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் பல கஷ்டங்களை சந்தித்த அஜித், 'காதல் மன்னன்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 1998 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சரண் இயக்கி இருந்தார். அந்த காலகட்டத்திலேயே படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

,
தற்போது 'காதல் மன்னன்' திரைப்படத்தின் கதாநாயகி மானு என்பவர் பேட்டியளித்திருக்கிறார். அப்பேட்டியில் காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை குறித்தும் அஜித் பற்றியும் பேசி இருக்கிறார். இப்பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, "காதல் மன்னன் திரைப்படத்தில் நடிக்கும் போது நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தேன்.

Ajith

மேலும் என் தாத்தா அசாம் மாநில முதல்வர், நான் படிப்பில் மட்டுமே மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்பொழுது இயக்குனரும், துணை இயக்குனரும் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தனர். ஆனால் தற்போது நான் அந்த படத்தில் நடித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது வரை காதல் மன்னன் திரைப்படத்தை பற்றி ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும் அஜித் சார் மிகவும் எளிமையானவர். அது எனக்கு முதல் படம் என்பதால் அவர் என்னை மிகவும் பணிவுடன் பார்த்துக் கொண்டார்" என்று கூறியிருக்கிறார்.