#Breaking: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. தமிழ்நாட்டுக்கே பெருமை.! 



ajith-kumar-padma-bhushan-award

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித், தற்போது ரேஸிங் நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரின் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்து விளங்கிய நபர் என்ற பிரிவில், அஜித்குமாருக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma Bhushan award

பத்ம பூஷன் விருது அறிவிப்பு

திரைத்துறையில் அவரின் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்தல் என இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயல்பட்ட அவருக்கு, பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க" - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!

தேசிய அளவில் மிக உயரிய விருதுகளில், முதல் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ள பத்ம பூஷன் விருது அஜித் குமாருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தல ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துபாய் மண்ணில் சாதித்த அஜித்; 500 பேருக்கு அன்னதானம் கொடுத்த ரசிகர்கள்.!