சினிமா

வலிமை படப்பிடிப்பில் தல அஜித்திற்கு நேர்ந்த விபரீதம்! பெரும் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Summary:

ajith got accident in valimai movie

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தல  அஜித். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் அவரது ரசிகர்கள் பெருமளவில் ட்ரெண்டாக்கி வருவர். 

இந்நிலையில் நடிகர் அஜித் தற்பொழுது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும், மேலும் அந்த படத்தில் அவர் ஏராளமான பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதில் பைக் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது அஜித் கீழே விழுந்து விட்டதாகவும் அதனால் அவர் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதனையும் பொருட்படுத்தாமல் அவர் முதலுதவி எடுத்துக் கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ள செய்தி பரவிய நிலையில் அது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் #GetwellsoonThala என ட்விட்டரில் ட்ரென்ட் செய்தும்  வருகின்றனர்.
 


Advertisement