பாடலாசிரியருக்கு பரிசாக கொடுத்த நடிகர் அஜித்...!

பாடலாசிரியருக்கு பரிசாக கொடுத்த நடிகர் அஜித்...!


ajith-good-habit--

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபல நடிகர் அஜித் குமார் அவர்கள். அவர் தல என்று ரசிகர்கள் மத்தியில் செல்லமாக அழைக்கப்படுவார். தமிழ் திரையுலகில் இவருக்கென்று தனியே மதிப்பும் மரியாதையும் இருக்கும். அதேபோல் இவருக்கென்று தனியே ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. நடிகர் அஜித் அவர்கள் யாரை பார்த்தாலும் மரியாதை கொடுக்கும் குணம் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் திரைப்பட பாடலாசிரியர் அருண் பாரதி அவர்கள் சமீத்தில் நடிகர் அஜித்குமாரை சந்திக்க தனது மனைவியுடன் சென்றுள்ளார். தல அஜித் அவர்களை யாரை சந்திக்க விரும்பி சென்றாலும் அஜித்துடன் புகைப்படம் எடுப்பது வழக்கம். அஜித்தை பார்த்துவிட்டு அனைவரும் செல்பி எடுத்து வருவது வழக்கமாக இருக்கும். 

அந்த வகையில் பாடலாசிரியர் அருண் பாரதி அவருக்கு புகைப்படங்கள் மட்டுமல்லாமல் அஜித்தின் கையெழுத்தை பரிசாக கொடுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இது நடிகர் அஜித்தின் நல்ல மனதை காட்டுகிறது என்று பாடலாசிரியர் தெரிவித்துள்ளார்.