பிக்பாஸ் சென்றாயனுக்கு தல அஜித் செய்த செயல், போட்டு உடைத்த ரகசியத்தால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் சென்றாயனுக்கு தல அஜித் செய்த செயல், போட்டு உடைத்த ரகசியத்தால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!


ajith gifted swepter to sendrayan

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 2 .இதில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சென்ட்ராயன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் சந்தோஷமாக இருந்த சென்ட்ராயன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தல அஜித் குறித்து பெருமையாக பேசியுள்ளார். அதில், உன்னை கொடு என்னை தருவேன் என்ற படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது.

அப்போது அங்கு அதிக குளிர், அனைவரும் ஸ்வெட்டர் அணிந்துள்ளனர், நான் மட்டும் சாதாரண உடையில் இருந்தேன். குளிரால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதைப்பார்த்த அஜித் உங்களிடம் வேறு உடை இல்லையா என்று கேட்டார் நான் இல்லை என்றேன்.

உடனே அவர் அவரது உதவியாளரை அழைத்து இவருக்கு ஸ்வெட்டர் வாங்கிக் கொடுங்கள் என்று கூறினார். பின்னர் 1 மணி நேரத்தில் எனக்கு ஸ்வெட்டர் வந்துவிட்டது, அதை அணிந்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது என்றார்.

ஆனால் எனக்கு மட்டும் இல்லை அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் அவர் தான் ஸ்வெட்டர் வாங்கி கொடுத்துள்ளார் என்று பெருமையுடன் சென்ட்ராயன் கூறியுள்ளார்.