சினிமா

ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய தல ரசிகர்கள்!! அப்படி என்ன தான் செய்தார் அஜித்?

Summary:

ajith fans wited near vellore for him

சாதராண சினிமா நட்சத்திரம் ஒரு ஏரியாவிற்கு சென்றாலே கூட்டம் அலைமோதிவிடும். அதிலும் தல, தளபதி என்றால் நம் இளைஞர்களுக்கு சொல்லவே தேவையில்லை. என்ன வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடி விடுவார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான் தல ரசிகர்களால் நடந்துள்ளது. அஜித் வருவார் என்ன விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதும் முடிவடையவில்லை.

visuvaasam க்கான பட முடிவு

தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கிராமப்புற பகுதிகளில் படப்பிடிப்பு மற்றும் அதன் சம்பந்தமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதனால் அஜித் தனது கிராமப்பகுதிக்கு வர மாட்டாரா என அங்கு உள்ள ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் படப்பிடிப்பு முடித்துவிட்டு கேரளாவில் இருந்து வேலூர் வழியாக வருகிறார் என்ற ஒரு செய்தி நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது பொய்யா உண்மையா என்று கூட ஆராய தல ரசிகர்களுக்கு நேரமில்லை. செய்தியை கேள்விப்பட்டவுடன் பெரும் கூட்டமாக அங்கிருந்த டோல்கேட் பகுதிக்கு வந்து விடிய விடிய காத்திருந்துள்ளனர்.

இதனால் அந்த இடம் ஒரு மாநாடு போல காட்சியளித்தது. ஆனால் அஜித் அந்த வழியாக வராத காரணத்தினால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். 


Advertisement