அஜித் ரசிகர்கள் செய்த அடாவடியால் பிரபல திரையரங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!Ajith fans damaged rohini theater on viswasam 50th day

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிவா மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்ததால் விஸ்வாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

இந்நிலையில் பொங்கலுக்கு படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு விஸ்வாசம் படம் அஜித்திற்கு பயங்கர ஹிட் படமாகவும், வசூல் படமாகவும் அமைந்தது. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக விஸ்வாசம் படத்தை பார்க்க சென்றனர்.

viswasam

இந்நிலையில் விஸ்வாசம் படம் வெளியாகி நேற்றுடன் 50 நாட்கள் ஆன நிலையில் விஸ்வாசம் படத்தின் 50 வது நாள் சிறப்பு காட்சி சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தை காண அஜித் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த ரசிகர்கள் திரையரங்கை சேதப்படுத்தி, திரையரங்கை துவம்சம் செய்துள்ளன்னர்.

இதனால் திரையரங்கிற்கு சுமார் 6 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்கம் தெருவித்துள்ளது. மேலும் சிறப்பு காட்சிகளின் போது இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இனி சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப போவதில்லை என்றும் ரோகினி திரையரங்கம் தெரிவித்துள்ளது.