லாரி மீது ஏறி டான்ஸ் ஆடிய அஜித் ரசிகர் தவறி விழுந்து உயிரிழப்பு... !! சென்னையில் நடந்த பரிதாப சம்பவம்...!!

லாரி மீது ஏறி டான்ஸ் ஆடிய அஜித் ரசிகர் தவறி விழுந்து உயிரிழப்பு... !! சென்னையில் நடந்த பரிதாப சம்பவம்...!!


Ajith fan who danced on a lorry fell down and died...  Tragic incident in Chennai...

துணிவு பட கொண்டாட்டத்தின் போது சென்னையில். லாரி மீது ஏறி டான்ஸ் ஆடிய அஜித் ரசிகர் தவறி விழுந்து உயிரிழந்தார். 

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள துணிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா போன்ற பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

இந் படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் "துணிவு" படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் காட்சியாக தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் "துணிவு" திரைப்படம் வெளியாகியுள்ளது. 

தியேட்டர்களில் "துணிவு" திரைப்படம் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டர் முன்பு "துணிவு" படத்தின் கொண்டாட்டத்தின் போது ரோட்டில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய அஜித் ரசிகர் ஒருவர் திர்பாரத விதமாக தவறி ரோட்டில் விழுந்தார். 

இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமார் (19) சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர். விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

"துணிவு" படம் கொண்டாட்டத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழ்ந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.