சினிமா

தியேட்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற தல அஜித் ரசிகர் - நேரில் பார்த்த பிரபல நடிகர் பரபரப்பு ட்விட்!

Summary:

ajith fan-trying to fire him body in sathiyam therater

பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர்தற்போது சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் தமிழக மக்களையே பேசவைத்தது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் H.வினோத்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் இன்று வெளியானதை அடுத்து, தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் தல ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

இதனால் ரசிகர்கள் டிக்கெட்டிற்காக தியேட்டர் முன்பு இரவில் இருந்தே காத்து கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் சென்னை சத்யம் தியேட்டர் முன்பு டிக்கெட் பிரச்சினை காரணமாக உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நடிகர் சாந்தனு இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement