உளகளவில் ரசிகர்களை வைத்துள்ள அஜித் யாரோட ரசிகர் தெரியுமா? அவரே கூறிய தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!
பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.
மேலும் பல நடிகர்கள் அரசியல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இவர் விளையாட்டு,அறிவியல் என தனது பார்வையை வித்தியாசமான முறையில் செலுத்தி வருகிறார்.இதனால் இளைஞர்கள் அனைவருக்கும் இவர் மிகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் அஜித்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார் அப்பொழுது அஜித் அவரிடம் தான் உங்களது பெரிய ரசிகர் என கூறியுள்ளார். மேலும் இதனை கேட்டு குற்றாலீஸ்வரன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் அஜித் குற்றாலீஸ்வரனை சந்தித்துள்ளது மூலம் அவருடன் இணைந்து விளையாட்டுத் துறை சம்பந்தமாக பயிற்சி மையம் அல்லது அகாடமி போன்றவற்றை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்,