சினிமா

அஜித் ரசிகர்களுக்காக, பிக்பாஸ் பிரபலம் செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!

எந்த ஒரு பின்னணியும் இல்லாமல், சினிமா துறைக்குள் நுழைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவரின் எளிமை, நல்ல குணம், ஸ்டைலுக்கு என்றே உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

 எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருக்கக்கூடிய மதுரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாவைப் போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் விஸ்வாசம்  மற்றும் நேர்கொண்டபார்வை போன்ற மாபெரும் வெற்றி படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் அஜித்தின் புகைப்படம் பதித்த காலண்டர்  அச்சடித்துள்ளனர். அதனை நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான மதுமிதா தனது கணவருடன் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 


Advertisement