அடிதூள்.. வெளிவந்த அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட்! குஷியான ரசிகர்கள்!! என்னனு தெரியுமா??



Ajith 61 movie update

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவரது நடிப்பில் உருவான திரைப்படம் வலிமை. அஜித் ஆக்ஷன் மிகுந்த போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். 

வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித், எச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைகின்றனர்.

Ajith

அஜித்தின் 61வது படமான இதில் பல ஆண்டுகள் கழித்து அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும் இதில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தல 61 படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது படத்தின் ஷூட்டிங் மொத்தம் 75 நாட்கள் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.