திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! என்னாச்சு? அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!!

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! என்னாச்சு? அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!!


aishwarya-tested-corono-positive

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தற்போது தமிழ், ஹிந்தி என சினிமா துறையையே கலக்கி வரும் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தாங்கள் விவாகரத்து பெற்று பிரியவிருப்பதாக அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிய போதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தயவு செய்து மாஸ்க்  அணிந்து கொள்ளுங்கள். இந்த 2022 எனக்காக என்னவெல்லாம் வைத்திருக்கிறது பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.