மகளுடன் லிப் லாக் போஸ்.. ஐஸ்வர்யா ராயின் அதிரடி சம்பவத்தால் குவியும் சர்ச்சை கருத்துக்கள்.!
உலக அழகியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார். இவர் ஹிந்தி சூப்பர்ஸ்டார் என்று வருணிக்கப்படும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஆரத்தியா என்ற மகளும் இருக்கிறார். தமிழில் இவர் இறுதியாக எந்திரன் படத்தில் நடித்திருந்த நிலையில், அதனை தொடர்ந்து பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இவர் தனது மகள் ஆரத்தியாவுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தபடி போட்டோவை வெளியிடவே, அதற்கு நெட்டிசன்கள் ஆதரவு/எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளத்தில் இருதரப்பும் மாறிமாறி சண்டையிட்டுக்கொண்டுள்ளது.