சினிமா

நல்லது நடந்தா சரி.. தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில் புதிய டுவிஸ்ட்! சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

Summary:

நல்லது நடந்தா சரி.. தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தில் புதிய டுவிஸ்ட்! சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ்,பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்தனர்.

நடிகர் தனுஷ் மாறன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், Maaran is now yours.. Om Namashivaaya என பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்துள்ளார். இந்நிலையில் அதனை கண்ட தனுஷ் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement