நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது, என்ன ஆளே மாறிவிட்டரே...வைரலாகும் புகைப்படம்.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது, என்ன ஆளே மாறிவிட்டரே...வைரலாகும் புகைப்படம்.!


Aishwariya Rajesh latest photo viral

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படத்தில் கிராமத்து பெண் லுக்கில் நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் பல்வேறு படங்களில் நடித்த இவர், ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை,கனா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

Aishwariya Rajesh

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அதே போல் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது, என்ன ஆளே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பார்ப்பதற்கு பாலிவுட் நடிகை கஜோல் போலவே இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.