அச்சு அசல் ஜஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்... வைரலாகும் வீடியோ.!

அச்சு அசல் ஜஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்... வைரலாகும் வீடியோ.!


Aishwariya Rai doppelganger aashita singh

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த ஜீன்ஸ், எந்திரன் போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற அழகான மகள் உள்ளார். 

இந்நிலையில் தற்போது அச்சு அசல் ஜஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆஷிதா சிங் என்ற அந்த பெண் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் வசனங்களுக்கு லிப் சிங்க் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.