ஷாருக்கானை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரத்துடன் இணையும் அட்லீ.!

ஷாருக்கானை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரத்துடன் இணையும் அட்லீ.!


after-shah-rukh-khan-atlee-joins-the-leading-star-of-te-WYT3C8

தமிழ் சினிமாவில் முன்னணியை இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ. இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான நிலையில் இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த திரைப்படத்தின் இயக்குனர் அட்லீயின் மார்க்கெட்டும் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

bollywoodசல்மான் கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் போன்ற பாலிவுட்டின் முன்னணி நடிகர்களும் இயக்குனர் அட்லீயின் கதைகளை கேட்டிருப்பதாகவும் விரைவிலேயே இதனைப் பற்றிய தகவல்கள் வெளியாகும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

bollywoodஇந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுன் உடன் அட்லீ இணைந்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது . தற்போது இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் நடிக்க இருப்பது தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து உறுதியாக இருக்கிறது.