விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
அடேங்கப்பா வேற லெவல்.! இளம்நடிகை அதுல்யா வெளியிட்ட ஜிம் வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள் !!
தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால் ஒருசிலர் தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை அதுல்யா ரவி. குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துவருகிறார்.

மேலும் நடிகை அதுல்யா ரவிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மிகவும் அதிகம். இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இந்நிலையில் அதுல்யா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் தீயாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.