பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
பள்ளி குழந்தைகளை வைத்து நடிகர் விஜய்க்கு பாலாபிஷேகம்; பரவும் வீடியோ காட்சி; வலுக்கும் எதிர்ப்புகள்!
பள்ளி குழந்தைகளை வைத்து நடிகர் விஜய்க்கு பாலாபிஷேகம்; பரவும் வீடியோ காட்சி; வலுக்கும் எதிர்ப்புகள்!
தமிழகத்தில் ஒரு தலைமுறையானது சினிமாவிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஒரு கலையை ரசிப்பதை தாண்டி அதற்கு அடிமை ஆகும் அவல நிலை இங்கு நிலவி வருகிறது. நடிகர்களின் கட்டிகளுக்கு பாலாபிஷேகம் செய்வது, மாலை அணிவிப்பதும் என தேவை இல்லாத வேலைகள் பலரால் செய்யப்படுகின்றது.
நாள் முழுவதும் உழைத்து கலைப்பாயிருக்கும் மக்களை உற்சாகப்படுத்துமே இதை போன்ற கலைகள் தமிழர்களால் வளர்க்கப்பட்டது. ஆனால் நம் அடுத்த தலைமுறையினர் இதற்கு அடிமைப்பட்டுக் கிடப்பார்கள் என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. இந்த தலைமுறை தான் இப்படி சீரழிந்து விட்டது; அடுத்து வரும் தலைமுறையாவது இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவார்கள் என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால் அதையும் கெடுக்க துவங்கிவிட்டனர் சிலர். அதற்கான உதாரணம் தான் இங்கு நடந்து கொண்டிருக்கும் இந்த சம்பவம்.
நடிகர் விஜய்யின் சர்க்கார் படம் உருவாகி கொண்டிருப்பதால் அதனை எதிர்பார்த்து ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர். அந்த படத்திற்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்றிற்கு பள்ளி குழந்தைகளை அழைத்து வந்து மலர்தூவி, பாலாபிஷேகம் செய்ய வைத்த ரசிகர்களை கண்டித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நடிகர் விஜய் இதுபோன்ற செயல்களை செய்யும் தன் ரசிகர்களை கண்டிக்க வேண்டும். அவருக்கு நெருக்கமானவர்கள் இதை போன்ற சம்பவங்களை எடுத்துக் கூற வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை கண்டித்தால் தான் விஜய்யை ஒரு நல்ல மனிதராக ஒத்துக்கொள்ள வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் இது போன்ற செயல்களைச்செய்யும் தன் ரசிகர்களை கண்டித்தால்தான் அவரை நல்ல மனிதர் என்று ஒத்துக்கொள்ள முடியும்..அவருக்கு நெருக்கமானவர்கள் அவர் பார்வைக்கு இதை கொண்டு செல்லுங்கள்😔@VijayOfficial pic.twitter.com/4ekjCgmTJs
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) October 18, 2018
சீருடையில் பள்ளிக்குச் சென்ற அந்த குழந்தைகளை அழைத்து வந்து செய்வது இப்படி செய்ய செய்வது எந்த விதத்தில் நியாயம்; அவர்களது மனதில் இப்படி தேவையில்லாத விஷயங்களை புகுத்துவது நல்லதா? நீங்கள்தான் சீரழிந்து விட்டீர்கள் அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழட்டும்; அவர்களையும் கெடுத்துவிடாதீர்கள் என்று பலர் தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கும் நிலை உருவாக வேண்டும். அதில் வரும் நடிகர்களை நம்மை மகிழ்விக்கும் ஒரு கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டும். அப்போதுதான் நமக்கான தலைவர்களை திரையில் தேடாமல் நம்மை சுற்றியிருக்கும் பகுதியில் நம்மால் கண்டுபிடிக்க முடியும்.