ஏன் இப்படி செய்றீங்க.! அடுத்த வேலைய பாருங்க.! பிக்பாஸ் பிரபலம் ஏ.டி.கே அட்வைஸ்.! யாருக்கு? என்ன நடந்தது??ADK advice to bisgboss contestants who defame others in interviews

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் ஏற்கனவே 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி துவங்கி நாளுக்கு நாள் அதிரடியாகவும், சுவாரசியமாகவும் சென்ற நிலையில் ஜனவரி 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நிறைவுக்கு வந்தது. இந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னரானார்.

 விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த பாடகர் ஏ.டி.கே. இவர் இடையில்  உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் தனது யுக்திகளால் 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்குப் பின் சமீபகாலமாக பிக்பாஸ் பிரபலங்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அப்பொழுது அவர்களில் சிலர் சகபோட்டியாளர்கள் குறித்து  குறை கூறிக்கொண்டு இழிவுபடுத்திக் கொள்கின்றனர்.


இந்த நிலையில் இதுகுறித்து ஏ.டி.கே தனது ட்விட்டர் பக்கத்தில் அட்வைஸ் செய்வது போல பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இந்த பிக்பாஸ் புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும்தான். அதனால் யாரும் இன்டர்வியூக்களின் போது சக போட்டியாளர்களை இழிவுபடுத்த வேண்டாம். சக போட்டியாளர்கள் குறித்து குறை கூறுவதை விட்டுவிட்டு, உங்களது அடுத்த வேலை குறித்த விளம்பரத்திற்காக மீடியாவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிகழ்ச்சி முடிந்துவிட்டது. எதார்த்தமான நிலைக்கு நகருங்கள் என கூறியுள்ளார். அது வைரலாகி வருகிறது.