மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
முண்டாசுப்பட்டி நடிகருடன் இணையும் அதிதி சங்கர்.! விரைவில் புதிய அப்டேட்.!
பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் இயக்கிக் கொண்டிருக்கிறார். இவரது இளைய மகள் அதிதி சங்கர் இவர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கிய கவர்மெண்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவர் தன்னுடைய போட்டோ ஷூட் ஒன்று நடத்தியிருந்தார். அதிதி சங்கரா இது.? என ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சி தேரோட்டமே அதில் இருந்தது.
தற்போது அதித்தி சங்கர் விஷ்ணு விஷாலுடன் நடிக்க புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கயிருக்கும் இந்த திரைப்படத்தை ராம்குமார் இயக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இவருடன் விக்ராந்தும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.