மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
விதவிதமான போஸ்.. எதை பார்ப்பது.! மாடர்ன் உடையில் இளசுகளை மெர்சலாக்கிய அதிதி ஷங்கர்! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரது இளைய மகள் அதிதி. அவர் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கிராமத்து கதாபாத்திரத்தில், பாவாடை தாவணியில் அசத்தலாக வந்து
முதல் படத்திலேயே அவர் மக்கள் மனதை கவர்ந்தார்.
மேலும் அதிதி விருமன் படத்தில் இடம்பெற்று செம ஹிட்டான மதுரைவீரன் பாடலை பாடி பாடகியாகவும் அவதாரமெடுத்துள்ளார். இந்த படத்தைத் தொடர்ந்து அதிதி சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘மாவீரன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கிளாமராக மாடர்ன் உடையில் மாறிமாறி அசத்தலாக போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.