
ஒவ்வொறு போஸும் வேற லெவல்...! விதவிதமான வீடியோ வெளியிட்ட ஷங்கரின் மகள்...!
இந்திய அளவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சங்கர். பிரமாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு ஏற்றாப்போல் இவரது படங்களும் மிக பிரம்மாண்டமாகவே இருக்கும். இந்நிலையில் இயக்குனர் சங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் சமீபத்தில் தான் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார்.
மேலும் தமிழ் சினிமாவில் அதிதி ஷங்கர் கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதிதி நடிகர் சிம்புவுடன் இணைந்து கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் விதவிதமான போஸ் கொடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
A little bucket of sass pic.twitter.com/yg9ImXfmAM
— Aditi Shankar (@AditiShankarofl) February 5, 2022
Advertisement
Advertisement