நடிப்புக்கு பைபை சொல்லிட்டு, அந்த வேலைக்கே போயிட்டாரா அதிதி ஷங்கர்.! புகைப்படத்தால் குழம்பிப்போன ரசிகர்கள்!!

நடிப்புக்கு பைபை சொல்லிட்டு, அந்த வேலைக்கே போயிட்டாரா அதிதி ஷங்கர்.! புகைப்படத்தால் குழம்பிப்போன ரசிகர்கள்!!


aditi-shankar-doctor-getup-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரது  மகள் அதிதி ஷங்கர். இவர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'விருமன்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பாலும், நடனத்தாலும் அவர் அனைவரையும் கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து அதிதி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று ஹிட்டானது. அதிதி ஷங்கர் சில பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் அவரது கைவசம் விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் ஒரு படமும், இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படமும் உள்ளது.

டாக்டர் படிப்பை முடித்த அதிதி தனது ஆசைக்காகவே சினிமாவில் நடிக்க வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது டாக்டர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து டாக்டர் A என பதிவிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அதிதி தனது படிப்புக்கேத்த டாக்டர் வேலைக்கு சென்று விட்டாரா? இல்லை ஏதேனும் படத்தில் டாக்டர் கெட்டப்பில் நடிக்கிறாரா? எனக் குழம்பி போயுள்ளனர்.