மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
விருமன் படத்தில் தாவணி பாவாடையில் கலக்கிய அதிதி சங்கரா இது.! மாடர்ன் உடையில் கிளாமராக வேற லெவலில் இருக்காரே.!!
தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி பெருமளவில் பிரபலமான பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. அவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற விருமன் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
முதல் படத்திலேயே அவர் மக்கள் மனதை கொள்ளை கொண்டார்.
மேலும் அதிதி பாடகியாக அவதாரமெடுத்து விருமன் படத்தில் மதுரைவீரன் பாடலை அசத்தலாக பாடி ஹிட் கொடுத்தார். இந்த படத்தைத் தொடர்ந்து அதிதி ‘மாவீரன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
அதிதி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது கிளாமராக மாடர்ன் உடையில் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.