தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அஜித்தின் ஒரு படத்திலாவது வில்லனாக நடிக்கவேண்டும்! பிரபல தமிழ் நடிகர் ஆர்வம்!
அஜித் சாறுடன் ஒரு படத்திலாவது அவருக்கு வில்லனாக நடிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் அதர்வா. மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன்தான் நடிகர் அதர்வா. பானா காத்தாடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அதர்வா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். தற்போது அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் அதர்வா.
இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் மேகா ஆகாஷுடன் ஜோடி சேர்ந்த "பூமராங்" வரும் மார்ச் 1 முதல் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அதர்வா பல்வேறு சுவாரஷ்யக் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், அஜித் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரே மிகப்பெரிய வில்லனாக மிரட்டியுள்ளார். அவர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும், எனவே ஒரு படத்திலாவது அவருக்கு வில்லனாக நடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அதர்வா.