அச்சோ.. நடிகை கங்கனா ரணாவத்துக்கு இப்படியொரு பிரச்சினையா?? விரைவில் குணமாக பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

அச்சோ.. நடிகை கங்கனா ரணாவத்துக்கு இப்படியொரு பிரச்சினையா?? விரைவில் குணமாக பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!


Actrss Kangana ranavut affected by tengu fever

தமிழ் சினிமாவில் தாம் தூம் என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அவர் அண்மையில் தாகத் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக கங்கனா ரனாவத் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி காலகட்டங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை மையமாகக் கொண்ட 'எமர்ஜென்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் இந்திரா காந்தியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை படக்குழு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலுடன் கங்கனா படப்பிடிப்பு தளத்தில் தனது பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.