ஆஹா! என்னா அடி! எங்களுக்கு மூச்சு முட்டுதும்மா! வைரலாகும் VJ ரம்யாவின் லேட்டஸ்ட் வீடியோ!

ஆஹா! என்னா அடி! எங்களுக்கு மூச்சு முட்டுதும்மா! வைரலாகும் VJ ரம்யாவின் லேட்டஸ்ட் வீடியோ!


actress-vj-ramya-playing-badminton-video-goes-viral

தொகுப்பாளினி ரம்யா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் துணை நடிகையாக கலக்கி வருகிறார் தொகுப்பாளினி ரம்யா. தொகுப்பாளினியாக இருந்த இவர் அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இதனையடுத்து ஓகே கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்து வந்தார் ரம்யா. இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ரம்யா. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர்.

vj ramya

கணவனை விவாகரத்து செய்த பிறகு தொலைக்காட்சி, சினிமா, ஒர்கவுட் என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் ரம்யா. தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

எப்போதும் தனது ஒர்க்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பேட்மிட்டன் விளையாடும் வீடியோ ஒன்றினை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாங்கு மாங்கு என பேட்மிட்டன் பந்தை அடிக்கும் அவரது காட்சியை பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் விளையாடுவது எங்களுக்கு மூச்சு முட்டுகிறது என்பதுபோல் கமெண்ட் செய்து வருகின்றனர்.