சினிமா

என்னம்மா, இப்படி சொல்லிட்டீங்களே..பிக்பாஸ் நிகழ்ச்சியை மோசமாக வச்சு செய்த பிரபல கவர்ச்சி நடிகை.!

Summary:

actress visithra tweet about bigboss show

தமிழ் சினிமாவில் சின்ன தாயே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விசித்ரா. இதனை தொடர்ந்து அவர் முத்து, ரசிகன்,ஜாதி மல்லி, எங்க முதலாளி, வீரா,ரகசிய போலீஸ்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் கவர்ச்சி வேடத்திலும், ஒரு ஆடலுக்கு கவர்ச்சி ஆட்டமும் போட்டுள்ளார். இவருக்கென ஏராளமான   ரசிகர்கள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் திருமணமான நிலையில், சினிமாவிலிருந்து விலகி தனது குடும்பத்துடன் புனேவில் வசித்து வந்தார்.இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.

actress visithra க்கான பட முடிவு

இதற்கிடையில் நடிகை விசித்ரா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் பரவியது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

actress visithra க்கான பட முடிவு

அதில், உலகத்தின் முன்பு பல் துலக்குவதும், படுக்கையில் இருந்து எழுந்து, தூங்கி வீங்கிய முகத்துடன் வெளியே ஓடி சென்று முட்டாள்தனமான ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடுவதும், அவர்கள் கொடுக்கும் சில்லியான டாஸ்க்குகளை செய்வதும, என்னுடைய நேர்மையான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் வேறொரு குணத்தில் வாழ முயற்சி செய்வதெல்லாம் என்னால் முடியாது என்று பதிவு செய்துள்ளார். 


Advertisement