இது பொண்ணா.. இல்லை பொம்மையா..! அழகில் அசரவைத்த நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்..



actress-vidya-pradeep-latest-photo

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் பொம்மை போன்று போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். இந்த தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில்  நடித்து வந்த இவர் ரசிகர்களின் பேராதரவை பெற்றதை அடுத்து ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானார்.

Vidhya pradeep

சீரியல் மட்டும் இல்லாமல் அம்மணி பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் பின்னர் அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தற்போது சிவப்பு நிற உடையில் பொம்மை போல் போஸ் கொடுத்த கியூட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில்  வைரலாகி வருகிறது.