90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
நடிகர் விஜய் அமைதியாக இருப்பார், ஷூட்டிங்கின் போது அவரிடம் தொடர்ந்து அதை செய்வேன்! ஓப்பனாக பேசிய நடிகை வரலட்சுமி!

சர்கார் ஷூட்டிங்கின்போது முருகதாஸுடன் சேர்ந்து நடிகர் விஜயை கலாய்த்ததாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், நடிகை வரலட்சுமி கூறுகையில் ஷூட்டிங்கின் பொது விஜய் சார் ரொம்ப அமைதியாக இருப்பார். அனால் நான் விடாமல் அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தான் நான் அமைதியாக இருந்தேன்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக நிறுத்தி நிதானமாக பேசினேன் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் வரலட்சுமியை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று விஜய் சார் தன்னை பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது என நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.