சினிமா

வாணி போஜன் நடித்த முதல் சீரியல் தெய்வமகள் இல்லை! எந்த டிவி? எந்த சீரியல் தெரியுமா?

Summary:

Actress vani bojan first serial in tamil

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்றுதான் தெய்வமகள். சிலசமயங்களில் சீரியலை விட அதில் நடிக்கும் நடிகைகள் அதிக வரவேற்ப்பை பெறுவது சாதாரணமாகிவிட்டது. 

அப்படி மக்களிடம் பிரபலமானவர்கள்தான்  இந்த தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வாணி போஜன். இந்நிலையில் தெய்வமகள் சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை தொடரில் நடுவராக பங்கேற்றுவருகிறார் வாணி போஜன்.

நடிகை வாணி போஜனின் இந்த வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் நாடகம்தான். ஆனால் வாணி போஜன் முதலில் நடித்தது ஜெயா டீவியில்தான். ஆம் 2013 ஆம் ஆண்டு "மாயா" என்ற தொடரில் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இதுதான் இவரது முதல் சீரியல். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரிலும் வாணி போஜன் நடித்துள்ளார்.

அதன்பிறகுதான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் நாடகத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி கொண்டார் வாணி போஜன்.


Advertisement